நடிகை சினேகா
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் சினேகா.
அழகான சிரிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயருக்கு சொந்தக்காரரானார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.
2009ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவிற்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சொத்து மதிப்பு
குழந்தைகள் பிறந்தபின் மீண்டும் நடிக்க வந்துள்ள சினேகா தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்துகிறார்.
அதோடு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
இன்று நடிகை சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.