Wednesday, March 26, 2025
Homeசினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நிவேதா தாமஸ் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நிவேதா தாமஸ் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா


நிவேதா தாமஸ்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்த இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்.

அதனைத்தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் இவர் நடிப்பில் வெளியான 35-சின்ன கதை காடு படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியானது.

சொத்து மதிப்பு

இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியிருக்கிறார். இன்று நிவேதா அவரின் 29 – வது பிறந்தநாள் என்பதினால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நிவேதா தாமஸ் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Nivetha Thomas Net Worth

இந்நிலையில், நிவேதாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 24 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.         

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments