நடிகை ரேவதி
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை ரேவதி.
அன்றைய காலகட்டத்தில் ரேவதிக்கு முன்னணி நடிகைகளின் வரிசையில் ரேவதிக்கும் ஒரு தனியிடத்தை ரசிகர்கள் கொடுத்திருந்தார்கள் என்றே கூறலாம்.
அப்படி நடிகை ரேவதி நடிப்பில் தயாராகி வெளியான ஒரு 6 சிறந்த படங்கள் என்றால் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், உதயகீதம், மௌன ராகம், அரங்கேற்ற வேளை போன்ற படங்களை கூறலாம்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார்.
சொத்து மதிப்பு
சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்தவர் பின் சில காரணங்களால் விவாகரத்து செய்துவிட்டு IVF மூலம் ஒரு குழந்தையை வளர்த்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. கேரளாவில் கிளாசிக் லுக்குடன் ஒரு வீடு, அதன்விலை ரூ. 3 முதல் ரூ. 4 கோடி என கூறப்படுகிறது.
அதேபோல் சென்னையில் வசிக்க ஹைடெக் வீடு, அதன்விலை ரூ. 5 கோடி இருக்குமாம். வீடு மட்டுமில்லாமல் 2 ஆடம்பர கார்களையும் வைத்துள்ளாராம்.