நவரச நாகயன் கார்த்திக்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவரை நவரச நாகயன் என அழைத்து ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
தனக்கென்று தனி இடத்தை திரையுலகில் பிடித்த இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
கார்த்தியின் தந்தை முத்துராமும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் என்பதை நாம் அறிவோம். முத்துராமை தொடர்ந்து கார்த்தி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தற்போது கார்த்தியின் மகனான கவுதம் கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார்.
சொத்து மதிப்பு
இன்று நவரச நாயகன் கார்த்திக்கின் 64வது பிறந்தநாள் என்பதினால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 90 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.