Thursday, December 26, 2024
Homeசினிமாஇன்று ரிலீஸ் ஆன ஜுனியர் என்டிஆரின் தேவாரா... ஆனால் திரையரங்கிற்கு முன் தீ பிடித்து ஏற்பட்ட...

இன்று ரிலீஸ் ஆன ஜுனியர் என்டிஆரின் தேவாரா… ஆனால் திரையரங்கிற்கு முன் தீ பிடித்து ஏற்பட்ட விபத்து


தேவாரா

ஒரு படம் எடுத்தால் இப்போதெல்லாம் சில மொழிகளில் டப் செய்து பிரபல நடிகர்கள் வெளியிடுகிறார்கள்.

அப்படி இன்று தமிழில் வெளியாகியுள்ள ஒரு தெலுங்கு படம் தேவாரா. ஜுனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ஆந்திர மாநிலங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு முதல் நாளில் கிடைத்துள்ள நல்ல விமர்சனங்களை கண்ட என்டிஆர் தனது ரசிகர்களுக்கும் நன்றி கூறியிருந்தார்.

தீ விபத்து


படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் தேவாரா படத்தின் வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது பட்டாசு வெடித்ததில் அருகிலிருந்த ஜுனியர் என்டிஆர் கட்அவுட் தீப்பற்றி எரிந்தது, இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி வர தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்தில் வந்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்பது நல்ல செய்தி. 

இன்று ரிலீஸ் ஆன ஜுனியர் என்டிஆரின் தேவாரா... ஆனால் திரையரங்கிற்கு முன் தீ பிடித்து ஏற்பட்ட விபத்து | Jr Ntr Huge Cutout Catches Fire Devara First Day

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments