Wednesday, September 18, 2024
Homeசினிமாஇன்று OTT-ல் வெளியான படங்கள்.. லிஸ்ட் இதோ!!

இன்று OTT-ல் வெளியான படங்கள்.. லிஸ்ட் இதோ!!


திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. அவ்வாறு இருக்க சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்ற சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT -யில் வெளியாகிறது.

அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த OTT தளங்களில் வெளியாகி உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்.

டர்போ :


மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான மம்முட்டி நடிப்பில் கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியான படம் டர்போ.

இதில் மம்முட்டியுடன், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.


அவுட் ஆப் எ ஜாம்:


ஷாலினி ஹர்ஷ்வால் இவர் தற்போது இமாசல பிரதேசத்தில் உள்ள புய்ரா என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு தனித்துவமான கதையை வழங்கும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த ஆவண திரைப்படத்திற்கு அவுட் ஆப் எ ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று இந்த ஆவணப்படம் ஓபன் தியேட்டர் என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.



சந்து சாம்பியன்:



இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு கதையை சந்து சாம்பியன் என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது.
இன்று இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

இன்று OTT-ல் வெளியான படங்கள்.. லிஸ்ட் இதோ!! | This Week Upcoming Movie List


7 ஜி :


டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்த ஹாரர் படத்தை என் ஹாரூன் இயக்கி உள்ள படம் இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் ஜுலை 5-ந் தேதி இந்த படம் வெளியானது. இது ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்று இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

இன்று OTT-ல் வெளியான படங்கள்.. லிஸ்ட் இதோ!! | This Week Upcoming Movie List


இந்தியன் 2:



தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி இந்தியன் 2 படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.  

இன்று OTT-ல் வெளியான படங்கள்.. லிஸ்ட் இதோ!! | This Week Upcoming Movie List

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments