நிவேதா தாமஸ்
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தமிழில் முன்னணி நடிகர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்.
அதனைத்தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்த நிலையில், தற்போது இவர் நடித்த 35-சின்ன கதை காடு படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வரும் செப்டம்பர் 6 -ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக, செய்தியாளர்களை சந்தித்த நிவேதா அந்த படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இப்படி நடிப்பில் எந்த பிரச்சனையும் இல்லை
அதில், சின்ன கதை காடு என்ற படத்தில் நான் ஒரு ஹோம்மேக்கராக நடித்துள்ளேன். இந்த படம் ஒரு வசீகரமான கதையை கொண்டுள்ளது. அதனால் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதுபோன்ற இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நடிப்பு என்று வந்து விட்டால் அனைத்து கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டும் என்று நிவேதா கூறினார்.
மேலும், இந்தப்படத்தில் நான் என் அம்மாவை விட நல்ல நடிப்பை வெளிப்படுத்தினேன் என்று இந்த படத்தை பார்த்து விட்டு அனைவரும் நினைத்தால் அதுவே எனக்கு பெரும் மகிழ்ச்சி. இயக்குனர்கள், நிவேதா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவர் என்று நம்பினால் அதுவே எனக்கு கிடைக்கும் பெரும் பரிசு என்றும் கூறியுள்ளார்.