Saturday, December 7, 2024
Homeசினிமாஇயக்குநர் அட்லீயை நேரில் சந்தித்தது தளபதி விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ

இயக்குநர் அட்லீயை நேரில் சந்தித்தது தளபதி விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ


விஜய் – அட்லீ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவருடைய திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் முன்னணி இயக்குநர் அட்லீ.



நண்பன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த அட்லீ, நடிகர் விஜய்யின் நட்பை பெற்றார். பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தனது வெற்றியை பதித்தார்.

இயக்குநர் அட்லீயை நேரில் சந்தித்தது தளபதி விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ | Vijay Atlee Recent Meet At Function



இதனை தொடர்ந்து விஜய்யுடன் கைகோர்த்து தெறி படத்தை எடுத்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ரூ. 150 கோடி வசூல் செய்த முதல் விஜய் திரைப்படமும் இதுவே என கூறப்படுகிறது. இதன்பின் மெர்சல், பிகில் என இவர்கள் இருவரும் இணைந்த படங்கள் அனைத்துமே வெற்றியடைந்தது.

நேரில் சந்திப்பு



இதன்பின் இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். ஆனால், தற்போது விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தனது கடைசி படம் தளபதி 69 என அறிவித்துவிட்டார். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகிறார்.


இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இயக்குநர் அட்லீயை நேரில் சந்தித்தது தளபதி விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ | Vijay Atlee Recent Meet At Function

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments