ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ஜெயம் ரவியின் படத்தை பற்றிய விஷயங்களை தாண்டி அவரது சொந்த வாழ்க்கை குறித்து நிறைய பேச்சுகள், சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
அவர் தனது மனைவியை பிரிவதாக கூறியிருக்கிறார், அதன்பிறகு ரசிகர்களால் நிறைய விமர்சனம் எழுந்தன.
ஜெயம் ரவியோ படத்தை பற்றி யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பில் என்னை மாற்றிக்கொள்வேன். ஆனால் எனது சொந்த வாழ்க்கை அது என்னுடையது, நான் பார்த்துக்கொள்வேன்.
மற்றவர்கள் பேசுவதற்கு உரிமை இல்லை என கூறியிருக்கிறார்.
முதல் படம்
அவரது சொந்த வாழ்க்கை பற்றிய பல பிரச்சனைகளுக்கு இடையில் படம் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது நடிகர் ஜெயம் ரவி இப்போது இயக்குனராக களமிறங்க இருக்கிறாராம்.
அவரது முதல் பட ஹீரோ நடிகர் யோகி பாபு என கூறப்படுகிறது, இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்தை காண மக்களும் ஆர்வமாக உள்ளனர்.