அனிருத்
தமிழ் சினிமாவை இப்போது ஆட்சி செய்யும் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்.
அடுத்தடுத்து வெளியாகும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளராக உள்ளார்.
தமிழில் ஒரு கலக்கு கலக்கும் அனிருத் ஹிந்தியில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமா ரசிகர்களை தன்னை கவனிக்க வைத்துள்ளார்.
இவரது இசையில் கடைசியாக ஜுனியர் என்டிஆர்-ஜான்வி கபூர் ஜோடியாக நடித்த தேவாரா திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபலம் உதவி
இந்த நிலையில் அனிருத் தனது நண்பரும் இயக்குனருமான நெல்சன் திலீப்குமாருக்கு செய்த உதவி வெளிவந்துள்ளது.
நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு முக்கிய காரணம் அனிருத் தான். இந்த நிலையில் தேவாரா படத்தின் படப்பிடிப்பின் போது ஜுனியர் என்டிஆரை சந்தித்து நெல்சன் கதை கூற அனிருத் உதவியுள்ளாராம்.
நெல்சனின் கதையை கேட்டு ஜுனியர் என்டிஆரும் ஓகே கூறியுள்ளதாக கூறப்படுகிறது.