Monday, February 17, 2025
Homeசினிமாஇரண்டாம் நாளில் அப்படியே குறைந்த கங்குவா வசூல்.. சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம்

இரண்டாம் நாளில் அப்படியே குறைந்த கங்குவா வசூல்.. சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம்


நடிகர் சூர்யாவின் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. பான் இந்தியா அளவில் வசூலை குவிக்க வேண்டும் என்பதற்காக வேறு எந்த படமும் வராத தேதியில் இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார்.

படத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, ஹிந்தி மாநிலங்களிலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இருப்பினும் ரிலீசுக்கு பிறகு கலவையான விமர்சனங்கள் வருவதால் தயாரிப்பாளர் சொன்னபடி 1000 – 2000 கோடி வசூல் சாதனை படைக்குமா கங்குவா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

முதல் நாளில் உலகம் முழுக்க 58.62 கோடி வசூலித்து இருக்கிறது இந்த படம்.

2ம் நாளில் குறைந்த வசூல்

முதல் நாளில் சென்னையில் 1.5 கோடி ருபாய் வசூலித்த கங்குவா, இரண்டாம் நாளில் சற்று சரிவை சந்தித்து இருக்கிறது.

இரண்டாம் நாளில் வந்த சுமார் 1.3 கோடி ரூபாய் வசூலுடன் சேர்ந்து இரண்டு நாட்களில் மொத்தம் 2.8 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது கங்குவா. 

இரண்டாம் நாளில் அப்படியே குறைந்த கங்குவா வசூல்.. சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Kanguva 2 Days Chennai Box Office

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments