நடிகை பிரணிதா
சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கர்ப்பமாக இருக்கும் பிரணிதா
கடந்த 2021ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு அழகிய மகளும் பிறந்தார். இந்த நிலையில் நடிகை பிரணிதா சுபாஷ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்காக ரசிகர்கள் பலரும் பிரணிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த பதிவு..