Tuesday, March 18, 2025
Homeசினிமாஇரண்டாவது முறையாக தாயாகும் எமி ஜாக்சன்.. கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை

இரண்டாவது முறையாக தாயாகும் எமி ஜாக்சன்.. கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை


எமி ஜாக்சன்

தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின் தாண்டவம், தெறி, ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்ஷன் நாயகியாக மிரட்டியிருந்தார்.



நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தை பிறந்தது. 20215ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து அவருடைய லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் எமி ஜாக்சன்.

இரண்டாவது முறையாக தாயாகும் எமி ஜாக்சன்.. கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை | Amy Jackson Second Time Pregnant

குழந்தை பிறந்த பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக Ed Westwick என்கிற ஹாலிவுட் நடிகரை காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் எமி ஜாக்சின் – Ed Westwick திருமணம் நடைபெற்றது.

இரண்டாவது முறையாக தாயாகும் எமி ஜாக்சன்.. கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை | Amy Jackson Second Time Pregnant

கர்ப்பமாக இருக்கும் எமி

இந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நடிகை எமி ஜாக்சன் அறிவித்துள்ளார்.

தனது கணவர் Ed Westwick உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ள நடிகை எமி ஜான்சனுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.



இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments