ராயன்
தனுஷ் நடித்து இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த படம் ராயன். இப்படத்தில் சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன், வசூலிலும் மிகப்பெரிய அளவிற்கு சாதனை படைத்துள்ளது.
125 கோடி
முதல் வாரத்திலேயே இப்படம் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைக்க, தற்போது இரண்டாவது வாரத்திலும் ராயன் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படம் இரண்டு வார முடிவில் ரூ 125 கோடிகள் உலகம் முழுவதும் வசூல் செய்து, தனுஷ் திரைப்பயணத்தில் அதிக வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது.