அந்தகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். இவரை டாப் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இவர் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அந்தகன். இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்தகன் படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 2.1 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ. 65 லட்சம் வசூல் செய்திருந்த அந்தகன் படம், இரண்டு நாட்களில் இரண்டு மடங்கு வசூல் அதிகரித்துள்ளது.