இளையராஜா
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக இருக்கும் இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
சுவாரசிய தகவல்
இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அந்த படத்தை இரண்டு பாகங்ககளாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.