Friday, September 20, 2024
Homeசினிமாஇளையராஜா பயோபிக்.. வெளியான புது அப்டேட் இதோ!

இளையராஜா பயோபிக்.. வெளியான புது அப்டேட் இதோ!


தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார்.

காலம் கடந்து அவரது பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. இந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கின்றார்.

ராக்கி, கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவ்வாறு ஆக்ஷன் த்ரில்லர் படங்களை இயக்கிய அருண் இளையராஜாவின் பயோபிக்கினை எப்படி காட்ட போகிறார் என எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. படத்திற்கு ‘இளையராஜா – தி கிங் ஆஃப் மியூசிக்’ என தலைப்பு வைத்துள்ளனர். மேலும், நடிகர் கமல்ஹாசன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்.

செட் அமைக்கும் பணிகள்


நடிகர் தனுஷ் தற்போது, குபேரன் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அதை தொடர்ந்து, ஆனந்த் எல்.ராய் இயக்கும் பாலிவுட் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். கைவசம் உள்ள படங்கள் முடிந்தபின், இளையராஜாவின் பயோபிக் கதையில் நடிப்பார் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

தற்போது, இந்த படத்தின் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இதில் முத்துராஜ் உடன் இளையராஜா, அருண் மாதேஸ்வரன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து , இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இளையராஜா பயோபிக்.. வெளியான புது அப்டேட் இதோ! | Ilaiyaraaja Biopic Work Started

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments