அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதனை முடித்தபின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
கைநழுவிப்போன வாய்ப்பு
அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களின் வாய்ப்பும் அவர் கையைவிட்டு போயுள்ளது. அப்படி அஜித் நடிப்பதாக இருந்து அவர் கையைவிட்டு போன திரைப்படங்களில் ஒன்று தான் ஜீன்ஸ்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் தானாம்.
ஆனால், சில காரணங்களால் இப்படம் அவர் கையைவிட்டு போயுள்ளது.
அவர் மட்டும் இப்படம் நடித்திருந்தால் கண்டிப்பாக வேற லெவலில் இருந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.