பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் என்றால் சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
அதன்பிறகு டிஆர்பியில் டாப்பில் வந்த தொடர் என்றால் பாக்கியலட்சுமி. இப்போது இந்த தொடரில் ஈஸ்வரி நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்புகிறார்.
அவரை காண கோபி வீட்டிற்கு வர ஈஸ்வரி தனது தலையில் தண்ணீர் சுற்றி இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். இதனால் கோபி மிகவும் உடைந்து காணப்படுகிறார்.
அடுத்த கதைக்களம்
இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடர் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தொகுப்பாக 2 மணி நேரம் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம். கோபி மற்றும் பாக்கியா இருவரும் நேரடியாக ஒரு சமையல் போட்டியில் போட்டு போடுகின்றனர்.
அதில் பாக்கியாவை சந்தித்து இதில் நீ ஜெயிக்க மாட்ட என இன்னும் திருந்தாமல் சவால் விடுகிறார். இதோ பாக்கியலட்சுமி தொடர் புரொமோ,