ஈரமான ரோஜாவே 2
விஜய் டிவி தொடர்களில் நடித்த நடிகைகள் எல்லோருமே மக்களிடம் நன்கு பிரபலம் ஆகிவிடுவார்கள்.
அப்படி விஜய்யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறியவர் சுவாதி.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சுவாதி கன்னட படங்களில் நடித்துள்ளார், யாரிவலு என்கிற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார்.
ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு பிறகு கார்த்தியின் 27வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டானார், அதேபோல் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
புதிய சீரியல்
தற்போது சுவாதி சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கும் தொடர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சுவாதிக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் தொடர் புகழ் நியாஸ் ஹீரோவாக நடிக்கிறாராம்.
முதலில் இந்த புதிய தொடருக்கு வாரணம் ஆயிரம் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது தேவதை என மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.