பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் 2வது இடத்தில் இருக்கும் ஒரு முக்கியமான தொடர்.
சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த தொடரில் நடித்தவர்கள் அனைவரும் இப்போது மக்களின் பேராதரவை பெற்று வருகிறார்கள்.
கதையில் இப்போது கொலை பழி போட்டு வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஈஸ்வரியை சரிசெய்ய அவரை கும்பகோணம் அழைத்து சென்றுள்ளார் பாக்கியா.
இன்னொரு பக்கம் ஈஸ்வரியை கொலைகாரி என்றதால் ராதிகா அம்மாவை அடிக்க சென்றுவிட்டார் கோபி.
அடுத்த கதைக்களம்
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த கதைக்களத்தின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ராதிகாவின் அம்மா போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு எனது மகளின் மாமியார் ஈஸ்வரி மீது புகார் கொடுக்க வேண்டும், அவரால் எனது மகள் உயிருக்கு ஆபத்து, பயமாக இருக்கிறது என புகார் அளித்துள்ளார்.
இதனால் போலீஸ் பாக்கியா வீடு சென்று ஈஸ்வரி யார் என விசாரிக்கின்றனர். இதோ பரபரப்பு புரொமோ,