நடிகர் அஜித்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார், பேட்டி கொடுப்பதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவது இல்லை, தான் உண்டு தன் வேலை உண்டு என மட்டுமே இருக்கிறார் அஜித். இருப்பினும் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் குறையவில்லை.
தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
வியந்த நடிகர்
விடாமுயற்சி படத்தில் நடிகர் ஜீவா ரவி குணச்சித்திர ரோலில் நடித்து இருக்கிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பார்த்து பேசியபோது அவர் நடத்திய விதத்தை பார்த்து அவர் வியந்து பதிவிட்டு இருக்கிறார்.
“நான் பார்த்ததிலேயே மிக அற்புதமான மனிதர். உச்சத்தில் இருக்கும் ஒருவர் இப்படி இருப்பதை பார்க்கும்போது நம்பவே முடியவில்லை.”
“வாழ்நாள் முழுக்க நினைவிருக்கும். நீங்கள் எனது குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்கினீர்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார்” என ஜீவா ரவி பதிவிட்டு இருக்கிறார்.