Tuesday, February 18, 2025
Homeசினிமாஉடல் எடை குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. கோபமாக சமந்தா கூறிய பதில்

உடல் எடை குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. கோபமாக சமந்தா கூறிய பதில்


சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்யும் பிரபலம். இப்போது பாலிவுட் பக்கமும் சென்று கலக்க தொடங்கியுள்ளார்.

வரும் நவம்பர் 7ம் தேதி அதாவது நாளை சமந்தா நடித்துள்ள சிட்டாடல்: ஹனி பன்னி வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.


நடிகையின் பதில்

ஏதாவது படம் ரிலீஸ் என்றால் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். நடிகை சமந்தாவும் நாளை வெப் தொடர் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர், கொஞ்சம் உடல் எடையை அதிகரியுங்கள் என்று கூறியிருந்தார்.

உடல் எடை குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. கோபமாக சமந்தா கூறிய பதில் | Samantha Answered About Body Weight Question

அதற்கு சமந்தா, நான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது தெரியும். மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி எனது உணவை எடுத்துக் கொள்கிறேன்.

கடுமையான அழற்சி எதிர்ப்பு உணவை எடுப்பதால் என் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

தயவுசெய்து மற்றவர்களின் குறைகளை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள், நாம் 2024ல் இருக்கிறோம், வாழு, வாழவிடு என கூறியுள்ளார்.

உடல் எடை குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. கோபமாக சமந்தா கூறிய பதில் | Samantha Answered About Body Weight Question



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments