அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். துணிவு படத்திற்கு பின் அஜித் கமிட்டான விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
ஆனால், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதுகுறித்து சில புகைப்படங்கள் கூட வெளிவந்திருந்தது. ஆனால், தற்போது லேட்டஸ்ட் ஆக வெளிவந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்களே ஷாக்காகியுள்ளனர்.
ஏனென்றால், தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார் அஜித். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..