Thursday, December 26, 2024
Homeசினிமாஉண்மை என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்..கோபத்தில் பேசிய மனோவின் மனைவி ஜமீலா

உண்மை என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்..கோபத்தில் பேசிய மனோவின் மனைவி ஜமீலா


மனோவின் இரண்டு மகன்கள்

பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் இரண்டு மகன்களான ரஃபீக், சாஹீர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியதாக கூறி சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டது.

இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாடகர் மனோவின் மகன்களான ஷகீர், ரபீக் ஆகியோரை 10க்கும் மேற்பட்டோர் கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்குவது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியானது.

மனோவின் மனைவி கொடுத்த பேட்டி  

அந்த வீடியோவில் 4 டூவீலர்களில் 10 – க்கு மேற்பட்டோர் ஷகீர், ரபீக் இருவரையும் தாக்குவது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது.

தற்போது, இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கும் நிலையில், மனோவின் மனைவி ஜமீலா ஊடகத்தினரை சந்தித்து நேற்று பேட்டி அளித்துள்ளார்.

உண்மை என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்..கோபத்தில் பேசிய மனோவின் மனைவி ஜமீலா | Mano Wife Met Press After New Cctv Footage Release

அதில், என் இரு மகன்களும் எந்த தவறும் செய்யவில்லை, உண்மை என்னவென்று தெரியாமல் அவதூறுகளை பரப்பாதீர்கள். “எங்களிடம் ஆதாரம் இல்லாத காரணத்தினால் தான் நான் பேசவில்லை.

இப்போது ஆதாரத்துடன் வந்திருக்கிறேன். இதனால் என் மகன்கள் பயந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments