Thursday, February 6, 2025
Homeசினிமாஉயிரிழப்பு 3-ஆக உயர்வு.. நடந்த அதிர்ச்சி சம்பவம்

உயிரிழப்பு 3-ஆக உயர்வு.. நடந்த அதிர்ச்சி சம்பவம்


முதல் மாநாடு

தளபதி விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. விக்ரவாண்டியில் உள்ள வி சாலையில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு 5 லட்சத்திற்கும் மேல் மக்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.



மாநாட்டிற்காக பல்வேறு ஊர்களில் மக்கள் வந்த நிலையில், இன்று காலை சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் இருந்த இளைஞர் உயிரிழப்பு. மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.



மேலும் நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக 11 பேர் உயிர் தப்பினர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிட்டுள்ளார் என தகவல் வெளிவந்தது.

உயிரிழப்பு 3-ஆக உயர்வு


இந்த நிலையில், தற்போது திருச்சியில் இருந்து வந்த தவெக மாநாட்டிற்காக வந்துகொண்டிருந்த தொண்டர்களின் கார் உசேன் பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குளாகியுள்ளது. காரில் பயணித்த 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

தவெக மாநாடு: உயிரிழப்பு 3-ஆக உயர்வு.. நடந்த அதிர்ச்சி சம்பவம் | Tvk First Manadu 3 Members Died

காலை இளைஞர் ஒருவரின் மரண செய்தியே அனைவரையும் அதிர்ச்சியாக்கிய நிலையில், தற்போது இருவர் இறந்துள்ளது பேர்தர்ச்சி கொடுத்துள்ளது.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments