Saturday, December 7, 2024
Homeசினிமாஉயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.. காமெடி நடிகர் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி

உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.. காமெடி நடிகர் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

இவர் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வெளி வந்த படம் தென்மேற்குப் பருவக்காற்று.

இந்த படத்திற்கு பிறகு தமிழில் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், விக்ரம், வேதா, காத்துவாக்குல இரண்டு காதல், மாஸ்டர் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார்.

உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.. காமெடி நடிகர் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி | Vijay Sethupathi Helps Comedy Actor Son

இதை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.1100 கோடி வசூல் ஈட்டியது.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த மகாராஜா படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி. நிஜத்திலும் மாஸ் ஹீரோவாக இருக்கிறார்.

உதவிய விஜய் சேதுபதி



அதற்கு சான்றாக, காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு ரூ. 76 ஆயிரம் கல்லூரியில் ஃபீஸ் கட்டியுள்ளார் விஜய் சேதுபதி. அதாவது தெனாலியின் மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படித்து வருகிறார்.

உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.. காமெடி நடிகர் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி | Vijay Sethupathi Helps Comedy Actor Son

தெனாலியால் தன் மகன் கல்லூரி ஃபீஸ் செலுத்த முடியவில்லை. இதனை அறிந்த விஜய் சேதுபதி அந்த கட்டணத்தை செலுத்தி தெனாலிக்கு உதவியுள்ளார்.

இதற்கு தெனாலி நானும் என் மகனும் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments