Monday, February 17, 2025
Homeசினிமாஉரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா விடாமுயற்சி படம்.. உண்மை போட்டுடைத்த பிரபலம்

உரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா விடாமுயற்சி படம்.. உண்மை போட்டுடைத்த பிரபலம்


விடாமுயற்சி

நடிகர் அஜித் – மகிழ் திருமேனி – லைகா நிறுவனம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

விடாமுயற்சி ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் தழுவல் என கூறப்பட்டு வந்தது. அப்படத்தின் உரிமையை வாங்காமல், விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார்கள் என்றும், இதனால் அந்த ஹாலிவுட் நிறுவனம் ரூ. 150 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துவிட்டது என்று பேச்சு எழுந்தது. இந்த நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசியுள்ளார்.

உரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா விடாமுயற்சி படம்.. உண்மை போட்டுடைத்த பிரபலம் | Producer Dhananjayan On Vidaamuyarchi Rights Issue

உரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா

இதில் “லைகா தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, பிரேக் டவுன் படத்திற்கான உரிமையை வாங்கிட்டோம், அதற்கான தொகை எவ்வளவு என்று அவர்கள் கூறவில்லை. இந்த கதை துவங்கும்பொழுது, இன்ஸ்பிரேஷனாக தான் ஆரம்பித்துள்ளது.

உரிமை வாங்காமல் எடுக்கப்பட்டதா விடாமுயற்சி படம்.. உண்மை போட்டுடைத்த பிரபலம் | Producer Dhananjayan On Vidaamuyarchi Rights Issue

பின் பல காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்ததன் காரணமாக, லைகா நிறுவனம் அந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி, அப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளார். இந்த ரூ. 150 கோடி வழக்கு என வெளிவரும் செய்திகள் அனைத்துமே பொய்” என கூறியுள்ளார். இதன்மூலம், விடாமுயற்சி உரிமை குறித்து பரவிய வந்தந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments