பிக் பாஸ் 8 சுனிதா
பிக் பாஸ் 8 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் சுனிதா. இவர் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
பின் இவருக்கு குக் வித் கோமாளி தான் நல்ல அடையாளத்தையும் அன்பையும் மக்கள் மத்தியில் பெற்று தந்தது. தமிழில் இவர் பேசுவதும், பாடுவதும் மக்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றது.
கமல் ஹாசனுடன் சுனிதா
குக் வித் கோமாளி வெற்றிக்கு பின் பிக் பாஸ் 8ல் கலந்துகொண்டுள்ள சுனிதா 32 நாட்களை கடந்தும் வலிமையான போட்டியாளராக வீட்டிற்குள் இருக்கிறார். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிக்கொண்டிருக்கும் சுனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகநாயகன் கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 1 முதல் 7 வரை சுவாரஸ்யமான தொகுத்து வழங்கி வந்தவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி 8வது பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் கமல் ஹாசனுடன் சுனிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..