தங்கலான்
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தங்கலான்.
பிரமாண்டமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முதல் நாளில் இருந்த இப்படத்திற்கான வசூல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் விவரம்
அதன்படி, தங்கலான் இதுவரை உலகளவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் தங்கலான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் எத்தனை கோடிகளை வசூலை குவிக்கப்போகிறது என்று.