GOAT
மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார்.
விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் ஆகியோர் நடித்திருந்தார். ஏற்கனவே வசீகரா படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ் மனதில் இடம்பிடித்த ஆன் ஸ்க்ரீன் ஜோடியான விஜய் – சினேகா மீண்டும் GOAT படத்தில் இணைந்தனர்.
இவர்கள் மட்டுமின்றி மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, லைலா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள GOAT படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, GOAT திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 348 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இரண்டாவது வாரத்தின் இறுதியில் GOAT படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.