பிக்பாஸ் 8
விஜய் டிவியில் அதிக பொருட்செலவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
100 நாட்கள், 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், ஏராளமான மேகராக்கள், ஆடம்பரமான வீடு செட்டப், நாம் யோசிக்க முடியாத விளையாட்டுகள் என பிரம்மிப்பின் உச்சமாக பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது.
வரும் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாக தொடங்குகிறது.
தொகுப்பாளராக 8வது சீசனில் புதியதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி. இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஒரு லிஸ்ட் வலம் வருகிறது, ஆனால் நிஜமாகவே கலந்துகொள்ள போட்டியாளர்கள் குறித்து நிகழ்ச்சி அன்று காண்போம்.
சீரியல் நேரம்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகப்போகும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி எந்தெந்த தொடர்களின் நேரம் மாற்றம் என்ற ஒரு விவரம் வலம் வருகிறது, ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதோ அந்த விவரம்,