புஷ்பா
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
மேலும் பகத் பாசில் வில்லனாகவும், நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடலுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில் எப்படி ஊ சொல்றியா மாமா பாடல் இருந்ததோ, அதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. ஆனால், அந்த பாடலில் சமந்தா நடனமாடவில்லை. அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரி என்பவர் நடமாடுகிறார் என சொல்லப்படுகிறது.
சமந்தா போல் மேடையில் நடனமாடிய ஷாருக்கான்
சமீபத்தில் IIFA விருதுகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா பாடலுக்கு நடிகர் விக்கி கவுஷல் உடன் இணைந்து மேடையில் நடிகர் ஷாருக்கான் நடனமாடியுள்ளார்.
உலகளவில் பிரபலமான இந்த பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் விக்கி கவுஷல் இணைந்து விருது விழாவில் நடனமாடியது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Yeh tho asli FIRE hey 🔥🔥
KING KHAN @iamsrk & @vickykaushal09 set the stage on FIRE 🔥😄 pic.twitter.com/bpqUL40hgk
— Mythri Movie Makers (@MythriOfficial) September 28, 2024