Thursday, December 26, 2024
Homeசினிமாஎதிர்நீச்சல் சீரியலில் கடைசி 10 நாட்களில் என்ன ஆனது?.. ஓபனாக கூறிய இயக்குனர் திருச்செல்வம்

எதிர்நீச்சல் சீரியலில் கடைசி 10 நாட்களில் என்ன ஆனது?.. ஓபனாக கூறிய இயக்குனர் திருச்செல்வம்


எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் டிஆர்பியில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தொடர்.

கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் 4 பெண்களை மையமாக கொண்டு எடுத்த இந்த தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

1000 தாண்டி 2000 எபிசோடுகள் கண்டிப்பாக போகும் என்றெல்லாம் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் 750 எபிசோடுகளை கடந்து முடிந்துவிட்டது. இது சீரியல் குழுவினரை தாண்டி ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துவிட்டது.

இயக்குனர் பேட்டி

சீரியல் திடீரென முடிந்தது குறித்தும், கடைசி 10 நாட்கள் எப்படி இருந்தது பற்றியும் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், சீரியல் முடியப்போகிறது என 10 நாட்களுக்கு முன்பு காலையில் படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் கூறினேன், உடனே எல்லோரும் அழுதுவிட்டார்கள்.

ஹரிப்பிரியா இனி இந்த வீட்டை நான் அதிகம் மிஸ் செய்வேன் என அழுதுவிட்டார், காரணம் அவருக்கு காட்சிகள் இல்லாத நேரத்தில் என்னுடைய வீட்டில் கூட வராத நிம்மதியான தூக்கம் இந்த வீட்டில் வருகிறது என தூங்கிவிடுவார்.

அவர் மட்டுமில்லை எல்லா நாயகிகளும் அழுதுவிட்டனர். கடைசி 10 நாள் படப்பிடிப்பில் தினமும் வருத்தப்பட்டார்கள்.

அதிலும் கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருக்கும் ஆறுதல் கூறுவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

எதிர்நீச்சல் சீரியலில் கடைசி 10 நாட்களில் என்ன ஆனது?.. ஓபனாக கூறிய இயக்குனர் திருச்செல்வம் | Thiruselvam About Ethirneechal Ending Open Talk

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments