Saturday, December 7, 2024
Homeசினிமாஎதிர்நீச்சல் சீரியலை முடித்த கையோடு சன் டிவியின் ஹிட் தொடரில் கமிட்டான பிரபலம்... யார் பாருங்க

எதிர்நீச்சல் சீரியலை முடித்த கையோடு சன் டிவியின் ஹிட் தொடரில் கமிட்டான பிரபலம்… யார் பாருங்க


எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற பெண்ணை மையப்படுத்தி வந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அந்த தொடரை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் எதிர்நீச்சல்.

குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவரின் குடும்பத்தில் திருமணம் செய்துவரும் பெண்களின் போராட்டத்தை பற்றிய கதையாக தொடர் அமைந்தது.

ஆரம்பத்தில் நல்ல விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டு டிஆர்பியில் டாப்பில் வந்த இந்த தொடர் மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கொஞ்சம் டல் அடிக்க தொடங்கியது.

தற்போது தொடரையும் முடித்துவிட்டார்கள், ஆனால் கிளைமேக்ஸ் வெயிட்டாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

புதிய தொடர்


இந்த தொடரில் கதிர்-நந்தினியின் மகளாக நடித்த குட்டி பாப்பா தாரா இப்போது சன் டிவியிலேயே ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடரில் நடிக்கிறார்.

புதியதாக என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் மகளாக எதிர்நீச்சல் குட்டி பாப்பா நடிக்கிறாராம். இதோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ, 

எதிர்நீச்சல் சீரியலை முடித்த கையோடு சன் டிவியின் ஹிட் தொடரில் கமிட்டான பிரபலம்... யார் பாருங்க | Ethirneechal Serial Celeb Committed In New Project

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments