Sunday, December 8, 2024
Homeசினிமாஎதிர்நீச்சல் 2 சீரியலின் புதிய கதாநாயகி இவர் தான்.. யார் தெரியுமா, இதோ பாருங்க

எதிர்நீச்சல் 2 சீரியலின் புதிய கதாநாயகி இவர் தான்.. யார் தெரியுமா, இதோ பாருங்க


எதிர்நீச்சல்

தமிழக மக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த சீரியல் எதிர்நீச்சல். திருசெல்வம் இயக்கி வந்த இந்த சீரியல் கடந்த 2022ஆம் ஆண்டு துவங்கியது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்துவின் குணசேகரன் கதாபாத்திரம் தான்.

இவருடைய மரணத்திற்கு பின் கதையின் போக்கு திசைமாறிய நிலையில், சில மாதங்களில் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. விரைவில் எதிர்நீச்சல் 2 சீரியல் வருகிறது என தகவல் வெளிவந்தது.

எதிர்நீச்சல் 2

ஆனால், இந்த சீரியலில் கதாநாயகியாக மதுமிதா நடிக்கவில்லை என அவரே தெரிவித்துவிட்டார். ஜனனி கதாபாத்திரம் என்றால் அனைவரும் நினைவுக்கு வருபவர் நடிகை மதுமிதா தான். ஆனால், அவரே தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் வறுத்தம் தான்.

எதிர்நீச்சல் 2 சீரியலின் புதிய கதாநாயகி இவர் தான்.. யார் தெரியுமா, இதோ பாருங்க | Ethirneechal 2 Serial New Heroine

புதிய கதாநாயகி

இந்த நிலையில், மதுமிதாவுக்கு பதிலாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் 2 சீரியலின் புதிய கதாநாயகி இவர் தான்.. யார் தெரியுமா, இதோ பாருங்க | Ethirneechal 2 Serial New Heroine

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பார்வதி. பின் சீரியலில் நடிக்க துவங்கினார். இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக பார்வதி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்நீச்சல் 2 சீரியலின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ எப்போது வெளியாகிறது என்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments