கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்த படம் திரைக்கு வருவதால் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று மலேசியாவில் இந்தியன் 2 ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று இருக்கிறது.
ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்து சூப்பர்ஹிட் கொடுத்த எந்திரன் படத்தில் முதலில் கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் இருந்து கமல் விலகியது ஏன் என்ற காரணத்தை தற்போது கூறி இருக்கிறார்.
இதனால் தான் விலகினேன்..
“எந்திரன் படத்தில் நடிக்க முதலில் ஷங்கர் என்னை தான் அணுகினார். ஆனால் அப்போது கால்ஷீட், சம்பளம், அப்போதைய மார்க்கெட் போன்ற பிரச்னைகளால் நான் விலகிவிட்டேன்.”
“ஷங்கர் அந்த படத்தை கைவிட்டுவிடுவார் என நினைத்தேன், ஆனால் ரஜினியை வைத்து எடுத்து பெரிய ஹிட் கொடுத்துவிட்டார்” என கமல் கூறி இருக்கிறார்.