நடிகை மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து நடித்து புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர்.
இவர் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்துள்ளார், தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில் மிகவும் நன்றாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் மஞ்சு வாரியர்.
வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவலை மஞ்சு வாரியர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
மஞ்சு வாரியர் பேட்டி
அந்த பேட்டியில் துணிவு, அசுரன், விடுதலை போன்ற படங்களை தேர்வு செய்ய முக்கிய காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மஞ்சு வாரியர், ” நான் விடுதலை மற்றும் துணிவு படத்தை தேர்வு செய்ய முக்கிய காரணம் வெற்றிமாறன் மற்றும் எச்.வினோத் தான்.
இவர்களை போன்ற சிறந்த இயக்குனர்கள் படத்தில் நடிக்க நான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன்.
மேலும் துணிவு படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்ட பிறகு தான் எனக்கு தெரியும் அந்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்று அது தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைத்தேன்.
இது போன்ற ஒரு சூழல் தான் வேட்டையன் படத்திலும் நடந்தது ரஜினிகாந்த் சார் இந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது எனக்கு பிறகு தான் தெரிந்தது.
நான் ஆசை பட்ட இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் நடித்தது என் மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறியுள்ளார்.