விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ 5வது சீசன் பைனல் நேற்று ஒளிபரப்பானது. டைட்டில் யாருக்கு என நடந்த போட்டியின் இறுதியில் பிரியங்கா தான் ஜெயித்தார் என நடுவர்கள் அறிவித்தனர்.
மேலும் பிரியங்காவுக்கு குக்கிங் ராசாத்தி என பட்டத்தையும் கொடுத்தனர்.
மற்றொரு முக்கிய போட்டியாளரான சுஜிதாவுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது. அவர் தான் ஜெயிப்பார் என அதிகம் ரசிகர்கள் எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரியங்கா – மணிமேகலை சண்டை காரணமாக கடந்த சில வாரங்களாகவே குக் வித் கோமாளி ஷோ பற்றி தான் நெட்டிசன்கள் பரபரப்பாக பேசி கொண்டு இருக்கின்றனர்.
பிரியங்கா பதிவு
இந்நிலையில் பிரியங்கா இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
“எனக்கு யாரும் போட்டி இல்லை. எனக்கு நான் தான் போட்டி. கிட்சன் சூப்பர்ஸ்டார் ஜெயிக்க முடியாத நான் தற்போது குக் வித் கோமாளியில் டைட்டில் ஜெயித்து இருக்கிறேன்” என பிரியங்கா கூறி இருக்கிறார்.