நடிகர் தருண்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சினிமாவில் கலக்கிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் தருண்.
1990களில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கானாவை சேர்ந்த இவருக்கு முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
அதன்பின் 2000ம் ஆண்டு முதன்முதலாக ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் இவர் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
லேட்டஸ்ட்
சாக்லேட் பாய் நடிகர் ரேஞ்சிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் இப்போது கொஞ்சம் குண்டாக ஆளே மாறியிருக்கிறார். அவ்வப்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும்.
இந்த நிலையில் தருண் தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரக்ஷாபந்தன் வாழ்த்து கூறி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதோ நடிகர் தருணின் லேட்டஸ்ட் பதிவு,