யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா.
இவரது இசையமைப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஜய் நடித்த கோட். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி யுவன் ஷங்கர் ராஜா நிறைய இசைக் கச்சேரிகளை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
திருமணம்
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திருமணத்திற்கு அப்பா இளையராஜா வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கடந்த 2015ம் தேதி சாப்ரூன் நிசா என்பவருக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அண்மையில் ஒரு பேட்டியில் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, என் கல்யாணம் திடீர் என்று தான் நடந்தது, ஊருக்கு போய் இருந்தேன், அடுத்த நாளே கல்யாணம் என்று இருந்தது.
அப்பாகிட்ட போன் செய்து சொன்னேன், அதற்கு அவர் நான் வருவேன், அது பிரச்சனை இல்லை. ஆனால் நான் வந்தா எனக்காக என்ன பண்றதுன்னு சங்கடப்படுவாங்க, அதனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
கல்யாணம் முடிச்சிட்டு அவரை போய் சந்தித்தோம் என கூறியுள்ளார்.