Saturday, March 15, 2025
Homeசினிமாஎன்னை ரூமிற்கு தனியாக அழைத்த அந்த பட இயக்குனர், என்னை.. பிரபல நடிகை பரபரப்பு தகவல்

என்னை ரூமிற்கு தனியாக அழைத்த அந்த பட இயக்குனர், என்னை.. பிரபல நடிகை பரபரப்பு தகவல்


சினிமா துறையில் அந்த காலத்தில் எப்படி தெரியவில்லை. ஆனால் சினிமாவில் உள்ள பெண்கள் அதிகம் பாலியல் தொந்தரவு குறித்து நிறைய கூறுகிறார்கள்.

சமீபத்தில் கூட பிரபல சீரியலின் இயக்குனர் தவறாக பேசுவது, ஒருமையில் கூறுவது, பெண்களிடம் தவறாக நடப்பது என சில விஷயங்கள் செய்தார் என தொடரில் இருந்து நீக்கியிருந்தனர்.

நடிகை தகவல்


இந்த நிலையில் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த நடிகை அஸ்வினி தான் சிறுவயதில் சந்தித்த ஒரு மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளார். தற்போது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் அஸ்வினி நடித்துள்ளார்.

இப்படத்தின் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, நான் படப்பிடிப்புக்கு எப்போதும் அம்மாவுடன் செல்வேன், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை வரவில்லை.

மேக்கப் போட பெண் கலைஞர் இருந்ததால் சென்றேன், அன்று இயக்குனர் என்னை மேலே கூப்பிட்டார்.

அப்போது என்னுடன் இருந்த பெண்ணை அழைத்தேன் வரவில்லை, அப்போது எனக்கு மிகவும் சின்ன வயது. ரூமிற்கு அழைத்து என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார். நான் அங்கிருந்து கீழே வந்ததும் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.

என் அம்மாவிடம் கூறினேன், அவர் மனமுடைந்து அழுதுவிட்டார்.
அவரிடம் கூறி அவரையும் அழ வைத்துவிட்டோமே என்ற கஷ்டம் அதிகம் இருந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் எந்த பட இயக்குனர் என்பது பற்றி அவர் கூறவில்லை. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments