Monday, March 17, 2025
Homeசினிமாஎன்மீது சேற்றை வாரி எறிகிறார்கள்.. தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாடகி கல்பனா ஆவேசம்

என்மீது சேற்றை வாரி எறிகிறார்கள்.. தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாடகி கல்பனா ஆவேசம்


பாடகி கல்பனா

Asianet ஸ்டார் சிங்கர் 5வது சீசனில் பங்குபெற்று வெற்றியாளரானவர் கல்பனா.

பிரபல பின்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்திராவின் மகளான இவர் 5 வயதில் இருந்தே இசைத்துறையில் கலக்கிய கல்பனா இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி உள்பட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.

பரபரப்பு பேச்சு

தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கல்பனா பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கோபமாக, சில ஊடகங்கள், குறிப்பாக யூடியூபர்கள் என் மோசமான நிலையில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை பரப்பினார்கள்.

என்மீது சேற்றை வாரி எறிகிறார்கள்.. தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாடகி கல்பனா ஆவேசம் | Singer Kalpana Slams False Health Rumours

இதுதான் நடந்தது என வீடியோ போட்டார்கள், உண்மையில் நடந்தது அவர்களுக்கு எப்படி தெரியும். நான் ஊடகங்களை எப்போதும் மதிப்பவள் என் குரலை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.

ஆனால் அவர்களில் சிலர் என்மீது சேற்றை வாரி எறிகிறார்கள், அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை சரி செய்ய அதிக நேரம் எடுக்கும். அதை நீங்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று கல்பனா ராகவேந்தர் கோபமாக கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments