தங்கலான்
விக்ரம் நடித்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் தங்கலான். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் ரூ.57 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம், பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.
பா. ரஞ்சித் பேச்சு
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், தங்கலான் படத்திற்காக பலர் அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இவ்வாறு கடினமாக உழைக்க என் மீது அன்பு உடையவர்களால் மட்டுமே முடியும் என்றும், அந்த அன்பு தான் என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்க தூண்டுகிறது என்றும்,தற்போது உள்ள சமூகத்திற்கு மிகவும் தேவையான படமாக தங்கலான் அமைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், எமோஷனலாகவும் பேசினார்.
மேலும், பல நடிகர்கள் அவர்களுக்கு ஏற்ற சூழலில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் நடிகர் விக்ரம் தன் முழு உழைப்பையும் இந்த படத்திற்காக அர்பணித்துள்ளார். இவ்வாறு கடினமாக உழைக்க இவருக்கு சினிமா மேல் உள்ள காதலும் ரசிகர்கள் மேல் உள்ள அன்பும் தான் காரணம். இவ்வளவு சினிமாவை நேசிக்கும் இவருக்கு தங்கலான் படம் ஒரு தீனியாக அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று அந்த பேட்டியில் கூறினார்.