நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பொன்னியின் செல்வன் படத்தில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தவர்.
தற்போது, கார்த்தி பிரேம்குமார் இயக்கத்தில், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில்
மெய்யழகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கார்த்தியுடன் இணைந்து இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
மெய்யழகன் திரைப்படம் வரும் 27- ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கார்த்தி
இந்த நிலையில், கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா இணைந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த பேட்டியில், கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறித்து கார்த்தி பேசுகையில், “அந்த ரோலில் என் அண்ணன் நடித்தது மிகவும் சர்ப்பிரைசை கொடுத்தது. ஆனால், சிறு வயதில் இருந்தே சூர்யாவை ரோலக்ஸ் கேரக்டரில் தான் நான் பார்த்து வருகிறேன். அதனால் அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று ஜாலியாக கூறியுள்ளார்.