கமல்ஹாசன்
கமல்ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி இருந்தது.
படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் எந்த குறையும் இல்லாமல் வசூலிக்கிறது. இந்தியன் 2 பட கதையை தாண்டி கமல்ஹாசன் அவர்களின் நடிப்பிற்கே படம் அதிக ரீச் பெற்றுள்ளது.
சிறுவயதில் இருந்தே நடித்துவரும் இவர் இதுவரை 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.
அக்ஷாரா பேச்சு
நடிகர் கமல்ஹாசனின் திருமண வாழ்க்கை குறித்து எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். முதலில் வாணி கணபதியை திருமணம் செய்தவர் பின் சரிகாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷாரா ஹாசன் என இரு மகள்கள் பிறந்தனர்.
சரிகாவை பிரிந்தவர் பின் கௌதமியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்தால், அதுவும் இப்போது கிடையாது. இந்த நிலையில் தனது பெற்றோர்கள் கமல் மற்றும் சரிகா விவாகரத்து பெற்றது குறித்து நடிகை அக்ஷாரா ஹாசன் பேசியுள்ளார்.
நாங்கள் பிரபலமானவர்களின் குழந்தைகள் என்றாலும் நாங்களும் மனிதர்கள் தான், நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் எப்போதும் உங்களது அப்பா-அம்மாவோடு இருப்பீர்கள் என்றுதான் எங்களிடம் சொன்னார்கள், அதை கேட்டு எனது மனம் கலங்கியது.
நானும், எனது அக்காவும் அதிர்ஷ்டசாலிகள், எங்களை அப்பாவும், அம்மாவும் புரிந்துகொண்டவர்களாக இருந்தார்கள்.
நாங்கள் பெற்றோரைவிட்டு பிரியவில்லை. அதுதான் முக்கியமான விஷயம், அதுதான் எங்களது வாழ்க்கையை எளிதான ஒன்றாக மாற்றியது.