பிரதாப் போத்தன்
தமிழ்,தெலுங்கு, மலையாள சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரு துறையிலும் சிறந்து விளங்கியவர் பிரதாப் போத்தன். தமிழில் அழியாத கோலங்கள், மூடு பனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற படங்கள் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இவருடைய மகளான கேயா பேட்டி ஒன்றில் தனது தந்தை பற்றிய அழகான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
நினைவுகளை பகிர்ந்த மகள் கேயா
அந்த பேட்டியில் பேசிய கேயா, “எனது அப்பா ஒரு சிறந்த இயக்குனர் அவர் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை எனக்கு மிகவும் பிடித்த படம், அவர் நடித்த மலையாள படமான ஒன்ஸ் அபான் எ டைம் தேர் வாஸ் எ கல்லன் படம் அவர் நடிப்பில் வெளியான ஒரு சிறந்த படம் என கூறினார்.
மேலும், “இசை என் குடும்பத்தில் ஒரு பகுதியாக இருந்தது. நான் பாடகியாக இன்று இருப்பதற்கு முக்கிய காரணம் என் அப்பா தான். அவர் உதவியால் தான் நான் அனைத்தையும் கற்று கொண்டேன். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று அந்த பேட்டியில் கேயா கூறியுள்ளார்.
பிரதாப் போத்தன் நடித்த ‘அப்பாவும் வீஞ்சும்’ என்ற மலையாள படத்தின் மூலம் கேயா பாடகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.