ஜான்வி கபூர்
தமிழ் சினிமா ரசிகர்களால் மயில் என கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது படங்கள் மூலம் எப்போதும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018ம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தனது மகளுக்காக தேர்வு செய்ததே நடிகை ஸ்ரீதேவி தான்.
முதல் படத்தை தொடர்ந்து குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி போன்ற படங்களுக்காக ஜான்வி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
இப்போது தென்னிந்தியாவில் என்.டி.ஆருடன் தேவாரா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகையின் பேட்டி
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜான்வி பேசுகையில், ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவேன், ஆனால் மொட்டை அடிப்பது மட்டும் செய்ய மாட்டேன்.
அந்த கதாபாத்திரத்திற்காக ஆஸ்கரே போன்ற விருது கிடைக்கும் என்றாலும் செய்ய மாட்டேன். என்னுடைய நீள்மான தலைமுடிக்காக என் அம்மா அத்தனை அக்கறை எடுத்துக்கொண்டார்.
4 நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிடுவார், எனது தலைமுடி பற்றி மிகுந்த பெருமை இருந்தது.
முதல் படத்திற்காக தலைமுடியை வெட்டியபோது அம்மா கோபப்பட்டார், எந்த குழலிலும் தலைமுடியை வெட்டக்கூடாது என்று கூறி இருக்கிறார் என்றார்.