நடிகை அஞ்சலி
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.
அதை தொடர்ந்து, படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் திடீரென சினிமாவிலிருந்து விலகினார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
இயக்குனர் களஞ்சியம் பேட்டி
அஞ்சலி சினிமா துறைக்கு வர முக்கிய காரணமாக இருந்தது இயக்குனர் களஞ்சியம் தான். இவர்கள் இருவரும் இணைந்து ‘கருங்காலி’ என்ற படத்தில் நடித்துள்ளனர். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு களஞ்சியம் தனது சொத்தையெல்லாம் அபகரித்துவிட்டார் என்று அஞ்சலி கூறினார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில், இதுகுறித்து களஞ்சியம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இத்தாலி படத்தை தழுவி நான் ஒரு படத்தை இயக்கினேன். அந்த படத்தில் ஸ்ரீதேவி ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் நைட் இரண்டு மணி வரை இருந்து பிறகு, ஒரு தெலுங்கு பட ஷூட்டிங் சென்றார். அப்போது என் கையை பிடித்து கொண்டு இந்த படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும் சார் என்று கூறினார்.
ஆனால் திருப்பி அவர் வர வில்லை. அஞ்சலியுடன் இருந்தவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை அதனால் நான் அவர் சொத்தை அபகரித்து விட்டதாக கூறி இதுபோன்ற விஷயங்களை செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.