Monday, December 9, 2024
Homeசினிமாஎன் நண்பர்கள் எச்சரித்தார்கள்..தன் கணவர் பற்றி வெளிப்படையாக கூறிய ஆடுகளம் படத்தின் நடிகை டாப்ஸி

என் நண்பர்கள் எச்சரித்தார்கள்..தன் கணவர் பற்றி வெளிப்படையாக கூறிய ஆடுகளம் படத்தின் நடிகை டாப்ஸி


நடிகை டாப்ஸி 

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. நடித்த முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆனால் தமிழில் அனபெல் சேதுபதி, காஞ்சனா 2, ஆரம்பம் போன்ற சில படங்களில் மட்டும் நடித்து விட்டு பிறகு, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

டாப்ஸி டென்மார்க் நாட்டை சேர்ந்த மத்யாஸ் போ என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிம்ப்பிளாக திருமணத்தை நடத்தி முடித்தனர்.

கணவர் பற்றி டாப்ஸி

தற்போது, டாப்ஸி நடிப்பில் ஃபிர் ஆய் ஹாசின் தில்ருபா படம் வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.

என் நண்பர்கள் எச்சரித்தார்கள்..தன் கணவர் பற்றி வெளிப்படையாக கூறிய ஆடுகளம் படத்தின் நடிகை டாப்ஸி | Taapsee Talk About Her Husband

அதில், “மத்யாஸ் போவை நான் முதன்முதலாக 2013ஆம் ஆண்டு துபாயில் சந்தித்தேன். நான் அவரை சந்திக்கப்போகும் தகவலை என் நண்பர்களிடம் கூறினேன்.

உடனே அவர்கள் என்னை எச்சரிக்க ஆரம்பித்தார்கள். நீ புதிய நபரை சந்திக்கிறாய், எனவே கவனமாக இரு என்று பல விதமான அறிவுரை கூறினார்கள். அத்தனை பதற்றங்கள், அறிவுரைகளுக்கு இடையேதான் மத்யாஸ் போவை துபாயில் சந்தித்தேன்.

அவரை கண்டவுடன் எனக்கு இருந்த அனைத்து குழப்பங்களும் விலகி போனது.

அந்த நிமிடம் இவர்தான் என் வாழ்க்கைக்கு சரியானவர் என்று முடிவெடுத்து விட்டேன்” என்று தனது கணவர் பற்றி கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments